Idhayam Matrimony

கோவை மாநகராட்சியில் குடிநீர் வழங்க அறிவுறுத்தல்: அமைச்சர் கே.என்.நேரு

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

கோவை, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் வரவில்லை என்று கூறினார்கள். இது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 7 நகராட்சி, 33 பேரூராட்சிகள் உள்ளது. 22 லட்சம் பேர் மக்கள் உள்ளனர். சிறுவானி, பிள்ளூர் ஆகிய 6 திட்டப்பணிகள் மூலம் 325 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நபருக்கு 142 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன். பிள்ளூர் கூட்டுகுடிநீர் திட்டம் பைப்லைன் போடுவதற்கு தடைஆணை பெறப்பட்டதால் 2 ஆண்டுகள் தடைபட்டது. பின் பணிகள் முடிக்கப்பட்டது. நீங்கள் ஆரம்பித்தீர்கள், நாங்கள் முடித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து