Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல்காந்தி

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

ஸ்ரீநகர், அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு  நாடு திரும்பினார் ராகுல் காந்தி.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அட்டாரி - வாகா எல்லையை மூடுவது என பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். நேற்று நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக நாடு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து