எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வருகிற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு 18 நாள் சித்திரை தீருவிழா வருகின்ற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 3-ம் தேதி தர்மர் பிறப்பு, 7-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி சித்திரை தேரோட்டமும், 15-ம் தேதி விடையாத்தியும், 16-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், பூசாரிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


