Idhayam Matrimony

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
India-Border

Source: provided

பிஜப்பூர்: சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கையினால் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது பஸ்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியளவிலான நடவடிக்கை எனவும் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மாநில காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இந்த நடவடிக்கையில் தெலங்கானா காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் சக்தி வாய்ந்த ராணுவமாகக் கருதப்படும் பட்டாலியன் 1-ஐ சேர்ந்த மூத்த நக்சல்கள் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்கள் ஆகியோரின் நடமாட்டமுள்ளதாகக் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், கடந்த 21-ம் தேதி முதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து