Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் திடீர் சந்திப்பு: பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Amit Shah-2025-04-24

புதுடெல்லி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினர்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்தித்து பேசினர். அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து அவர்கள் விளக்கமளித்ததாக தெரிகிறது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதேபோல பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப். 27 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவ விசாக்களுக்கு ஏப். 29 வரை காலக்கெடு நிர்ணயித்தும் அதற்குள்ளாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விளக்கமளித்தும் வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து