எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் 'வணிக வரி, பத்திரப்பதிவு துறை வாயிலாக அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் , வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் மூர்த்தி அளித்த பதிலுரையில் தெரிவித்ததாவது., மாநில அரசின் வரி வருவாயில் வணிக வரித்துறை வாயிலாக, 71.6 சதவீதமும், பதிவுத்துறை வாயிலாக, 15.4 சதவீதம் பெறப்படுகிறது. அரசின் மொத்த வருவாயில், 87 சதவீதம் ஈட்டித்தரும் துறைகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன.
முந்தைய, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், வணிக வரித்துறை மொத்தமாக ஈட்டிய வரி வருவாய், 6.87 லட்சம் கோடி ரூபாய். ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியுள்ளது. பதிவுத்துறையில், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய், 88 ஆயிரத்து, 844 கோடி ரூபாய். ஆனால், தி.மு.க., ஆட்சியில், இதுவரை 72 ஆயிரத்து, 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


