Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Terrorist-house-destroyed-2

புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர். அந்த வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் வியாழக்கிழமை இரவு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அடில் உசேன் தோக்கர் அனந்த்நாக் மாவட்டத்தையும், ஆசிப் ஷேக் புல்வாமாவையும் சேர்ந்தவர்கள். ஹாஷிம் மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து