எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:- பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரு முறை பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். இல்லையெனில் ட்ரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து நேற்றுமுன்தினம் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன.
இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் அனைத்து ஏவுகணைகளையும் எங்களால் இடைமறித்து அழிக்க முடியும். ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையை மட்டும் எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். பிரம்மோஸை எங்களால் இடைமறித்து அழிக்க முடியாது என்று தெரிவித்தன. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ராணுவ தளபதி ஸ்ரீநகர் பயணம்: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நேற்று காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்கிறார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்க்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


