எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கவர்னர்ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. கவர்னர்தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:- கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது என்பது அவசியம். கல்வியால் தான் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். பயங்கரவாதம் உலகளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கவர்னர்ஆர்.என்.ரவியின் முயற்சியை பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களின் பிரச்சனைகளை அறிந்து அவற்றை களைவதற்கு துணை வேந்தர்கள் மாநாடு உதவும். கவர்னராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை கவர்னர்ஆர்.என்.ரவி தீவிரமாக கடைபிடிக்கிறார். கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார். எவ்வித தடையும் இல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


