Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க டெல்லி கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடக் கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கையை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, ஆதாரங்களுக்கு கூடுதல் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபியுங்கள் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி கோக்னே, இதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கும் முன்பு, நீதிமன்றம் முழுமையாக நம்ப வேண்டும். முழுமையான திருப்தி அடையாமல், இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படு வதாகவும் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. மேலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது.

இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து