எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளருக்கான ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது.
கடினமானதாக இருக்கும்...
இது தொடர்பாக ஐ.சி.சி. ரிவ்யூவில் ரவி சாஸ்திரி பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யாரைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், ஜோஸ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்.
சிறப்பாக செயல்படுவார்...
இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழல் ஜோஸ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக லார்ட்ஸ் திடலில் கிளன் மெக்ராத் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல, ஜோஸ் ஹேசில்வுட்டும் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


