Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ராஜினாமா? அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தததால் பரபரப்பு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      தமிழகம்
Raghupati 2024-10-28

சென்னை, செந்தில் பாலாஜிக்கு மாற்றாக மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால் அவர் ராஜினாமா செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது,

பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி மசோதாவை தாக்கல் செய்வார் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருப்பதுதான் பேசுபொருளாகி யிருக்கிறது.

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை, விசாரணையில், அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது.

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து வரும் ஏப்.28-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் தான், திங்கள்கிழமைக்குள், அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவேதான், நேற்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது வரும் 29ஆம் தேதி விவாதம் நடைபெறும் என்ற சூழலிலேயே, அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து