Idhayam Matrimony

சொந்த மண்ணில் சென்னை அணிக்கு 4-வது தோல்வி

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK 11-04-2025

Source: provided

சென்னை : ஐ.பி.எல். போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. சொந்த மண்ணில் சென்னைக்கு இது 4-ஆவது தோல்வியாகும்.

சென்னை பேட்டிங்...

முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் ஷேக் ரஷீது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். 3-ஆவது பேட்டரா சாம் கரன் வர, 2-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்தது அவா்கள் பாா்ட்னா்ஷிப். கரன் 9 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, ரவீந்திர ஜடேஜா வந்தாா். மாத்ரே 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அப்போது டெவால்டு பிரெவிஸ் விளையாட வர, ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

154 ரன்கள்...

தொடா்ந்து ஷிவம் துபே பேட் செய்ய, அதிரடியாக ரன்கள் சோ்த்த பிரெவிஸ் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 7-ஆவது பேட்டராக தீபக் ஹூடா விளையாட வர, துபே 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கேப்டன் எம்.எஸ். தோனி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த அன்ஷுல் காம்போஜ் 2, நூா் அகமது 2 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக தீபக் ஹூடா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வீழ்ந்தாா். கலீல் அகமது 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா். ஐதராபாத் பௌலா்களில் ஹா்ஷல் படேல் 4, பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோா் தலா 2, முகமது ஷமி, கமிண்டு மெண்டிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அபிஷேக் சா்மா டக்...

பின்னா் 155 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சா்மா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஹென்ரிக் கிளாசென் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நிதானமாக ரன்கள் சோ்த்த 3-ஆவது பேட்டா் இஷான் கிஷண் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அனிகெத் வா்மா 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

ஐதராபாத் வெற்றி... 

முடிவில் கமிண்டு மெண்டிஸ் 3 பவுண்டரிகளுடன் 32, நிதீஷ்குமாா் ரெட்டி 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை பௌலிங்கில் நூா் அகமது 2, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து