எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தஞ்சாவூர் : விஜய்யின் பேச்சு தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டினை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்ற விவரம் புரிந்துகொண்ட துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் அழைக்கக் கூடாத இடத்திற்கு அழைக்கிறார், எனவே, போகக் கூடாத இடத்திற்கு போகக் கூடாது என அவர்கள் செல்லவில்லை என்றார்.
மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும். இரண்டாவது இடம் யார் என்பதில் தான் மற்ற அணிகளுக்கு போட்டி. அழைப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் தனித்து நின்று விஜய் புலம்புகிறார். தி.மு.க.வின் வெற்றியை விஜய்யின் பேச்சு பாதிக்காது. பாதிக்கிற சூழல் தமிழகத்தில் இல்லை எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


