எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பல ஆண்டுகாலமாக புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பெல்ட் ஏரியா எனப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நில ஒதுக்கீட்டு வரம்புகளையும் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


