எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பஹல்காம் தாக்குதல்: பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் அதிபர் தனது ஆதரவை தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தொலைபேசியில் பேசினார். அப்போது இது போன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்களை திட்டவட்டமாக ஈரான் கண்டிக்கிறது என்று தெரிவித்த பெஷேஷ்கியன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் இந்த துயர சம்பவங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொறுப்பை அதிகரிக்கின்றன. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு நீடித்த அமைதியை உறுதிசெய்து ஒற்றுமை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் பயங்கரவாதத்தின் வேர்களை அழிக்க பிராந்திய அரசுகளை கட்டாயப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


