எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தெஹ்ரான் : ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது.
ஈரான் தலைநகரில் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதும் வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த விபத்து ஏற்பட்டது. உலக அளவிலான எண்ணெய் விநியோக பணியில் இந்த பகுதி முக்கியமானதாக உள்ளது.
துறைமுகத்தில் இருந்த ரசாயனங்களை மிகவும் மோசமான முறையில் பராமரிப்பின்றி அலட்சியமாக கிடங்குகளில் வைத்திருந்ததுதான் காரணம் என்கிறார் ஈரானின் நெருக்கடி மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளராக ஹுசைன் சபாரி. கன்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தான் இந்த வெடிவிபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு பாதுகாப்பு அமைப்பு சார்ந்தவர்கள் ஆய்வு நடத்திய போது, இந்த துறைமுகத்தில் இருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் ஈரான் அரசு தரப்பில் இந்த வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ரசாயனங்கள் இந்த விபத்துக்கு காரணமாக அமைத்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு அமைச்சர் ஒருவரையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


