எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜகண்ணப்பனுக்கு வனத்துறையும், சிவசங்கருக்கு மின்சாரத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறையும் காதி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சமீபத்திய சர்ச்சை பேச்சால் பொன்முடிக்கு எதிராக பலரும் (திமுக எம்.பி. கனிமொழியும்) கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினரான மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜையும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


