Idhayam Matrimony

புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான பின்னர் பஷியாபானு புதுச்சேரியில் வசித்து வந்தார். இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாஹே பிராந்தியத்தில் பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காகப் பாகிஸ்தானிலிருந்து விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாஹேவிலேயே தங்கிவிட்டார்.

பஹல்காம் சம்பவத்தின் காரணமாக பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவிலிருந்து வெளியேற வெளிநாட்டினர், பதிவு அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பஷியா பானு, பஷீர் ஆகியோரின் விசா ஏற்கெனவே காலாவதியானதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாஹே போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து