Idhayam Matrimony

சபாஷ்.. சரியான போட்டி..: அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வானதி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் இடையே விவாதம் நடந்தது.

தமிழக சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றுவிட்டனர், எல்லா இடத்திலும் நல்லவர்கள் இருக்க முடியாது" என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், "பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்ததை பார்த்து அமைச்சர் துரைமுருகன், "சபாஷ்.. சரியான போட்டி.." என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து