முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசியதாவது:

”இந்த தருணத்தை பயன்படுத்தி மாநில அந்தஸ்தை கோர மாட்டேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனது அரசியல் அவ்வளவு மோசமானதா? கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து கோரியுள்ளோம். எதிர்காலத்திலும் கோருவோம். ஆனால், 26 பேர் கொல்லப்பட்டுவிட்டனர், அதனால் எங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்பது எனக்கு அவமானம்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விருந்தினரான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வது எனது கடமை. என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்க வார்த்தைகள் இல்லை. தந்தையை இழந்த குழந்தையிடமும், திருமணமான சில நாள்களில் கணவனை இழந்த மனைவியிடமும் என்னால் என்ன சொல்ல முடியும்? விடுமுறையை கழிக்க வந்தோம், எங்கள் தவறு என்ன என்று கேட்கிறார்கள்? நாங்கள் இதுபோன்ற தாக்குதலை ஆதரவளிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை.

26 ஆண்டுகளில் முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஒன்றுகூடி தாக்குதலைக் கண்டித்துள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் அரசு கொண்டுவந்த கண்டன தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து