எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் 20-ந்தேதி இந்த தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. கடந்த முறை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில் இந்த முறை 35-40 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


