எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹாலிவுட் மிகவும் பிரபலமான ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட பாகங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் சண்டை காட்சிகள் ஆக்ஷன் ஜானர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. இதுவரை ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட தொடர்களில் ஏழு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது அதன் எட்டாவது பாடம் ‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. வழக்கம் போல் டாம் குரூஸின் டூப் இல்லாத சண்டைக் காட்சிகள் ரசிகர்களை வியக்கவைத்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான 8ஆயிரம் அடி உயரம் வரை ஏரோபிளேனில் டாம் குரூஸ் பறக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. இப்படம் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 14ஆம் தேதி ப்ரீமியர் செய்யப்படுகிறது. பின்பு மே 23ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது உலகளவில் வெளியாகும் நாளுக்கு 7 நாள் முன்பாக இப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரியே இதனையும் இயக்கியுள்ளார். பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


