எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார். வேறு நாட்டவரான அவர் பற்றிய எந்த விவரங்களும் தெரியாததால்
அவரை சிவாவே பராமரிக்கிறார். இதற்கிடையே, கரை ஒதுங்கிய அந்த நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் என்பது சிவாவுக்கு தெரிய வருகிறது. அதனால் அவரை ஜப்பானுக்கு அனுப்பும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார். ஆனால், இந்த சுமோ வீரர் ஜப்பானுக்கு வருவதை தடுக்கிறது ஒரு கும்பல், அவர்களது முயற்சிகளை முறியடித்து, சுமோ வீரரை ஜப்பானுக்கு சிவா அழைத்துச் சென்றாரா?இல்லையா என்பதை கமர்ஷியலாக சொல்லும் படந்தான் ‘சுமோ’. சிவா வழக்கம் போல் நடிக்காமல் பேசிக்கொண்டு காட்சிகளை கடத்தியிருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், தனக்கான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்தான், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு சுமார் ரகமே. நடிப்புடன் படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை சிவா எழுதியிருக்கிறார். கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் ஒரு கமர்ஷியல் படத்தை, கமர்ஷியல் அம்சங்களே இல்லாமல் இயக்கியிருக்கிறார்.
சுமோ மல்யுத்த வீரரைச் சுற்றி கதை நகர்ந்தாலும், அந்த வீரருக்கான வலுவான பின்னணி அம்சங்களோடு நிரைக்கதை இருந்திருந்தால் சுமோ வென்றிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


