முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது: நடிகர் அஜித் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      சினிமா      இந்தியா
Ajith-2025-04-29

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்  என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று முன்தினம் (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்.

இன்று (நேற்று) நான் நமது ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். அவர்களுடைய தியாகத்தை நாம் ஒவ்வொருவரும் வணங்க வேண்டும். ராணுவ வீரர்களின் கடுமையான உழைப்பால் தான் நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறோம். ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரவு பகல் பாராமல் அவர்கள் நமது நாட்டின் எல்லையைப் பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு மதத்தவருக்கும், சாதியினருக்கும் மதிப்பளித்து நாட்டில் சண்டையிட்டுக் கொள்ளாமல், ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து