Idhayam Matrimony

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை  கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தது. இதையடுத்து, மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது: ”பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். பாராளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று எதிர்க்கட்சி நம்புகிறது. அங்கு மக்களின் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும். அத்தகைய சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து