Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்ட சூழல் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஏப். 23 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து