எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரான் : ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாகக் கருதப்பட்டவர் மொஹ்சென் லங்கார்நெஷின். இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஈரானின் ராணுவ அதிகாரி கலோனெல் ஹசன் சையத் என்பவரின் படுகொலைக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையின் போது மொஹ்சென் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையானது நேற்று (ஏப்.30) நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மொஹசென் கடந்த 2020-ம் ஆண்டு மொஸாத் அமைப்பினால் பணியில் சேர்க்கப்பட்டதாகவும், நேபாளம் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய புலனாய்வுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரியான கலோனெல். ஹசன் சையத் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்நாட்டில் மிகப் பெரியளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


