Idhayam Matrimony

சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
Rahul 2024-12-03

புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு  காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், இதற்கென பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை திறந்தநிலை செயல்முறையை கடைப்பிடிக்கிறது. அதன் ஐடியாக்களை தேசிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பிலும் பின்பற்ற வேண்டுமென கருதுகிறோம். அது சார்ந்து மத்திய அரசுக்கு உதவவும் நாங்கள் தயார்.

சமூக நீதிக்கான எங்களது முயற்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரி வருகிறோம். மேலும், தேசத்தின் அதிகார அமைப்பில் நமது மக்கள்தொகையில் 90 சதவீத மக்களின் பங்களிப்பு என்ன என்பதை அறியவும், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கவும் விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே,  சாதிவாரி கணக்கெடுப்பு  குறித்து கருத்து தெரிவித்த  முதல்வர் ஸ்டாலின், சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக  அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து