Idhayam Matrimony

ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Exam (2)

சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்  ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கியது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடந்தது. அதேபோல, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்கியது. பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரையும் நடைபெற்றன. பொதுவாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரே நேரத்தில் வெளியிடும்.

இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து