Idhayam Matrimony

ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடியாக உயர்வு

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
GST-2023-05-01

புதுடில்லி, 2025 ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 2025-26 ஆம் நிதியாண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட(ரூ. 2.1 லட்சம் கோடி) 12.6% அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் வருவாய் ரூ. 1.96 லட்சம் கோடி.

கடந்த 2017, ஜூலை 1 ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும். இதில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து பெறப்படும் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ. 46,913 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து