Idhayam Matrimony

பிரதமர் என்னை பின்தொடர்வதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு பொறாமை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
Revanth-Reddy 2023-12-05

ஐதராபாத், பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று (மே.1) செய்தியாளர்களுடன் பேசிய அவர், மக்களவையில் 400 இடங்களை வெல்ல வேண்டும் எனும் பா.ஜ.க.-வின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்து விட்டதாகவும், அவ்வாறு அவர்கள் வென்றிருந்தால் தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதினால் கூட்டணி அரசைப் பாதுகாக்க வேறு வழியின்றி பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தற்போது அதனை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க., நேற்று வரையில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராகப் பேசி வந்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று அவர்கள் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தனர். ஆனால், தற்போது ஏன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள்? ஏனெனில், நாங்கள் மக்களை எச்சரித்தோம் அதனால் அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நம் நாட்டு மக்களுக்கு மிகவும் உதவியளித்துள்ளது. மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தியதினால் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இத்துடன், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் தெலங்கானா ஒரு முன்னோடி மாநிலம் என்று பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், ’நரேந்திர மோடி என்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள்’ என விமர்சித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து