Idhayam Matrimony

54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து

வியாழக்கிழமை, 1 மே 2025      சினிமா
Ajith-Kumar

சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. நேற்று அஜித் அவரது 54-வது பிறந்தநாளை கொண்டாடினார். திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அ.தி.மு.க. பொது செயலாளரான  எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்"  அஜித்குமாருக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து