Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 1 மே 2025      உலகம்
Balgam Attack-2025-04-24

வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அதை போராக கருதுவோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இந்திய - பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  அமெரிக்கா  கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா கூறியிருப்பதாவது:- இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து