எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி சுப்ரீம்கோர்ட்தீர்ப்பை அளித்தது.
அந்தத் தீர்ப்பில், கவர்னரின் செயல்பாடுகளைக் கண்டித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயித்த சுப்ரீம்கோர்ட்டு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142 தனக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது துணை வேந்தர்களை நியமிக்கும், நீக்கும் மசோதா, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


