Idhayam Matrimony

ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை அச்ச நிலைக்கு தள்ளிய தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த உடனேயே அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் 8 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து