Idhayam Matrimony

ம.பி.யில் விபத்து: 4 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

போபால், மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், போபாலுக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்கள் விதிஷா மற்றும் லேடேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தூரிலிருந்து சிரோஞ்சிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக ஆட்சியர் அன்ஷுல் குப்தா தெரிவித்தார்.

பலியானவர்கள் நாராயண் (20), கோகுல் (18), பசந்தி பாய் (32) மற்றும் ஹஜாரி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். விபத்து நடந்த உடனேயே, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், உள்ளூர் பாஜக எம்எல்ஏ உமாகாந்த் சர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து