எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 121 டிரோன்களை நேற்று (மே.1) ஒரே இரவில் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தத் தகவலை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் கடற்படை தளம் அமைந்துள்ள கிரிமியாவின் செவஸ்டபோல் நகரத்தின் மீது இயக்கப்பட்ட 89 டிரோன்களும், கருங்கடல் பகுதியில் 23 டிரோன்கள் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், செவஸ்டபோல் நகரத்தின் ஆளுநர் மிகாயில் ரஸ்வோஸாயேவ் கூறியதாவது: ”உக்ரைன், டிரோன்கள் மூலம் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், ரஷ்யாவின் கடற்படை மற்றும் நிலம் சார்ந்த விமானப் படையின் கூட்டு முயற்சியினால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார். இத்துடன், இந்தத் தாக்குதலில் க்ராஸ்னோதார் பகுதியில் 4 டிரோன்களும், ஒர்யோல் பகுதியில் 2 டிரோன்களும் மற்றும் பிரயான்ஸ்க், பெல்கோரோத் ஆகிய பகுதிகளில் தலா 1 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


