Idhayam Matrimony

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு ரூ.21 ஆயிரம் கோடி: யூடியூப் தகவல்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
YouTube 2024-03-27

Source: provided

மும்பை : ''யூடியூப் நிறுவனம் இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. இந்தியாவில் மேலும் ரூ.850 கோடியை முதலீடு செய்யும்'' என யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் தெரிவித்தார்.

மும்பையில் நடந்த 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டில் யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் பேசியதாவது: கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 10 கோடிக்கும் அதிகமான சேனல்கள் வீடியோக்களை அப்லோடு செய்துள்ளன. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. யூடியூப் நிறுவனம், இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது.

வீடியோ பதிவிடுவோர் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் இந்தியாவில் ரூ.850 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு இந்தியாவின் வீடியோ பதிவிடுவோர், அப்லோடு செய்த வீடியோக்களை வெளிநாட்டில் பயனர்கள் 45 பில்லியன் மணி நேரம் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) செலவிட்டு பார்த்துள்ளனர்.

இந்தியாவின் சிறப்பு என்ன என்பதை இந்திய வீடியோ பதிவிடுவோர் எடுத்துரைக்கின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, டிஜிட்டல் துறையில் வளர்ச்சியை உருவாக்கி உள்ளது. யூடியூப்பில் 2.5 கோடி அதிகமான சந்தாதாரர்களுடன், உலகின் எந்த தலைவருக்கு இல்லாத வகையில் பிரதமர் மோடி அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ளார். இவ்வாறு நீல் மோகன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து