எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, காலக்கெடு நிறைவு பெற்றதையொட்டி அட்டாரி வாகா எல்லைகள் மூடப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என அந்த நாட்டு மந்திரிகளே அலறி வருகின்றனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட இந்தியா முடிவு செய்தது. அதேநேரம் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்ட மத்திய அரசு, இதற்காக பல்வேறு காலக்கெடுவையும் அறிவித்தது.
அதன்படி இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் பஞ்சாப்பின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதைப்போல பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்களும் இந்த எல்லை வழியாக நாடு திரும்பினர். மத்திய அரசின் காலக்கெடு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதைப்போல பாகிஸ்தானும் தனது எல்லையை மூடிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில், இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்களும் வாகா எல்லையைக் கடந்து தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும், ஒரு சிலர் இன்னும் எல்லையில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


