எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி பேசியுள்ளார்.
கடைசி இடத்தில்...
ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு ஐ.பி.எல். தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே., வெறும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்தும் சி.எஸ்.கே. வெளியேறியது.
அச்சமடையப் போவதில்லை...
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக அச்சமடையப் போவதில்லை என சி.எஸ்.கே.வின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளே ஆப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக நாங்கள் அச்சமடையப் போவதில்லை.
சவாலளிக்கும் விதமாக...
இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை. எங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் சில வீரர்கள் கிடைத்துள்ளார்கள். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் சவாலளிக்கும் விதமாக எங்களால் விளையாட முடியும்.
பிரதான வீரர்களாக...
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு சில வீரர்களுக்கு இந்த சீசனில் கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. அவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை விடாப்பிடியாக நன்றாக பிடித்துக் கொண்டு அடுத்து சில சீசன்களில் சி.எஸ்.கே. அணியின் பிரதான வீரர்களாக அவர்கள் மாறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


