எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்ட தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று முன்தினம் 57,863 பேர் தரிசனம் செய்தனர். 31,030 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருப்பதி கோவில் பாபவிநாசம் அருகே உள்ள தும்புரா தீர்த்தம் வனப்பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர், தீயணைப்பு துறையினருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் வனப்பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடி கொடிகள் எரிந்து நாசமானது. அதற்குள் தீ திருப்பதி கோவில் வரை பரவியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திடீரென லேசான மழை பெய்தது. இதனால் தீ ஓரளவுக்கு கட்டுப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் தீ பரவியது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


