எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வி.கே.செல்லம் தாக்கல் செய்த மனுவில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நானும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவன். இந்நிலையில் எனக்கு தியாகிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்க கோரி அரசுக்கும், வீட்டு வசதி வாரிய தலைவருக்கும் மனு கொடுத்தேன். எனது மனுவை வீட்டு வசதி வாரிய தலைவர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். எனவே, எனது மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்குமாறு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விஷயத்தில் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரருக்கு வீடு ஒதுக்கீடு செய்யலாம். எனவே, மனுதாரரின் மனுவை பரிசீலித்து அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் சட்டத்திற்கு உட்பட்டு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


