எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு: தீர்மானம்: 1 - சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை உணர்த்திய முதல்வருக்கு பாராட்டுக்கள். அதுமட்டுமல்லாமல், “சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே” - “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே - நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ளார். மேலும், 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் துணையாகச் செயலாற்றி வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வாழ்த்தும் - பாராட்டும் - நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 2 - தி.மு.க. அரசின் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம்: 3 - தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 4 சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை அ.தி.மு.க. போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தி.மு.க..வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பா.ஜக அரசு பயன்படுத்துவதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் - மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜ. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


