Idhayam Matrimony

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: நாகை மீனவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
Fisher-Boat

நாகை, மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 20 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து