எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை தொடங்கிய போராட்டம் நேற்று 2 ஆவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவும் பல பகுதிகளில் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து நூதன முறையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருப்பூரிலும் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


