எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக 2வது முறையாக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்த வெற்றி ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை கொண்டு செல்ல இந்தியா- ஆஸ்திரேலியா நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


