Idhayam Matrimony

உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி: வெற்றிகரமாக இந்தியா சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      இந்தியா
rajnath 2025-01-01

Source: provided

புதுடில்லி : டி.ஆர்.டி.ஓ., சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

 மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவியை, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது.

இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது: 17 கிமீ உயரத்திற்கு அதிநவீன கருவியை வானில் பறக்கவிட்டு, முதல் விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. உளவுத்துறை, கண்காணிப்பை மேம்படுத்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உளவு தகவல் சேகரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது ஒரு மைல்கல் என டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சோதனை நடந்துள்ளது.

சோதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ.,வை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து