Idhayam Matrimony

12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு போதும்: திருமாவளவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

Source: provided

சென்னை : 12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் வி.சி.க.வின் கருத்து என திருமாவளவன் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் கட்டாய தேர்ச்சி கிடையாது என்ற நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி. இதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறோம்.

ஜனநாயக சக்திகள் இதனை புரிந்து கொண்டு தேசிய அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 12-ம் வகுப்பில் மட்டுமே பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்து.

ஆனால் வரிசையாக 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்டும் முயற்சியை பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது. நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மூலம் புரிந்து கொள்ள முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து