எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருக்குவளை : நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளில் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர். குறிப்பாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படங்களில் சென்ற 10 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் நடத்திய தாக்குதல் விவகாரத்தை கண்டித்து அந்த கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று (மே 4) செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் அதிகமான பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
ஏற்கனவே மீன்பிடித்தடை காலம் அமலில் இருக்கும் காரணத்தால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் பைபர் படகு மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


